சங்கப் பலகையில் இடம்


எனது உதகை காவிய முகாம் அனுபவங்களின் தொகுப்பு கிரி அவர்களின் இணையத்தில் பதிவு செய்திருக்கிறேன்.

திரு.ஜெய மோகன் அவர்களின் இணையத்தில் அறிவிப்பு செய்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அனுபவங்கள் முதற் பகுதி

அனுபவங்கள் இரண்டாம் (இறுதிப்) பகுதி

விரிவான கட்டுரைகள் அடுத்த வாரம் தொடங்குகிறது.

பற்றி veeraa1729
கணித பித்து பிடித்த ஒரு தமிழ் ஆர்வலர். சொல்லி கொடுப்பதிலும் கற்பிப்பதிலும் உள்ள உற்சாகம் எனக்கு திருத்துவதில் இல்லை. ஏனெனில் என் பிழைகள் அதிகம். அதை திருத்துவார் யார்?

2 Responses to சங்கப் பலகையில் இடம்

    • veeraa1729 says:

      கட்டுரையின் நீளம் கருதி சுருக்கியதால் ஏற்பட்ட குழப்பங்களுக்கும், எனது பல கருத்துக்களை அறிவார்ந்த சான்றோரிடம் பகிர்வதன் மூலம் தெளிவாக்கி
      கொள்வதற்கும் இவ்வாறு எழுத விரும்புகிறேன்.
      திரு.கிரி அவர்களின் வலையில் கூறும் பின்னூட்டங்கள் முக்கியமான சிலவற்றுக்கு அங்கேயே விடையளிக்க இயலாது.
      உதாரணமாக பிரகாஷ் அவர்களின் சொல் பிறகு, பொருள் முதலில் வாதம். ஜெய மோகனின் இணையத்தில் அவர் குறிப்பிட்டுள்ள பகுதியில் எனது கருத்திற்கு
      உடன்பாடாகவே உள்ளது. எனது முக்கியமான சில கட்டுரைகளை எழுதிவிட்டு இதற்கான விளக்கங்களை எழுதப் போகிறேன்.
      சிறு குறிப்பாக இங்கே.
      ஜெய மோகனின் இணையத்தில் இவ்வாறு வருகிறது
      ”பிரம்மாவின் மனத்தில் ஓம் என்ற ஒலிதான் முதலில் பிறக்கிறது. தியானத்தின் முடிவற்ற மெளனத்தில் இருந்து அவரது மனம் அறியும் முதல் ஒலி அது. அந்த ஓங்காரத்தில் இருந்தே மூவுலகங்களிலும் பிறந்து வருகின்றன என்று நாம் புராணக் கதைகளில் கேட்டிருப்போம். ஒலி எப்படி பருப்பொருளாக ஆகிறது என்பதற்கான விளக்கமே பிரணவவாதம் என்று கூறலாம்.”
      ”இந்த தரிசனத்தின்படி பிரபஞ்சத்தில் நாம் அறியும் ஒவ்வொன்றும் கருத்து வடிவில் நிரந்தரமாக இருந்துகொண்டிருக்கிறது. நாம் அவற்றுக்குப் பெயர்தான் போட்டுக்கொண்டிருக்கிறோம். இந்த நித்ய சப்த கோட்பாடு (தமிழில் அழியாமொழி கோட்பாடு) அதன் அடுத்த வடிவில் பிரணவவாதத்தை எட்டுகிறது.”
      சொல்லில் வேர்ச் சொல், கிளைச் சொல் என இரு பிரிவுகள் உள்ளன. வேர்ச் சொல்லிலிருந்தே அனைத்தும் பிறக்கின்றன.
      பொருளில் இருந்து சொல் தோன்றினால் ஒரு பொருள் பல சொற்கள் எனத் தோன்ற வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஒரு சொல்லில் இருந்தே பல பொருள்கள் பிறக்கின்றன.
      சொல்லுக்குத் தான் ஒலி வடிவம், பொருள் வடிவம் என (இரண்டிற்கு மேற்பட்ட) குணங்கள் உண்டு.
      வீண் தர்க்கங்களில் நான் ஈடுபட போவதில்லை. ஆக்கப் பூர்வமான கருத்துக்களுக்கு விளக்கம் தர முயலுகின்றேன்.

Follow

Get every new post delivered to your Inbox.