கல்வி உரிமை நாளைக் கொண்டாடுவோம்

// உண்மை நகல் //

ஜெ.ஜெயலலிதா
முதலமைச்சர் தலைமைச் செயலகம்,
சென்னை-600 009.

தேதி. 09.11.2011

வாழ்த்துச் செய்தி

அன்புள்ள மாணவ மணிகளே / உங்கள் அனைவருக்கும் என் வணக்கம்.

இந்தியத் திருநாட்டின் முதல் கல்வி அமைச்சராக இருந்து மறைந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 11 ஆம் நாள் ஆண்டுதோறும் “”"” தேசிய கல்வி நாள் “”"” என கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு முதல் இந்நாள், “”"” கல்வி உரிமை நாளாக”" கொண்டாடப்படவுள்ளது.
இந்தியத் திருநாட்டின் வருங்காலத் துhண்களாகிய நீங்கள் உங்களின் கல்வியறிவை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். கல்வியை விட மிக உயர்ந்த செல்வம் உலகில் வேறு ஏதுமில்லை, தமிழக அரசு, மாணவ, மாணவியரின் கல்வி வளர்ச்சிக்காக சத்துணவு, சீருடை, பாடப்புத்தகம் ஆகியவற்றை வழங்குவதுடன் கட்டணமின்றி பேருந்தில் பயணம் செய்யவும் வழிவகை செய்துள்ளது. மேலும், மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு மிதி வண்டியையும் வழங்குகிறது. அனைத்து பள்ளி வயது குழந்தைகளும் எளிதாக பள்ளிக்கு செல்லும் வகையில், அவர்களது குடியிருப்புக்கு அருகில் பள்ளிகளை ஏற்படுத்துவதோடு, தேவையான ஆசிரியர் பணியிடங்களையும் இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது.
மாணவ, மாணவியர்கள் தங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பினை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் பொருட்டு, இவ்வாண்டு முதல் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1500/-ம் 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு ரூ.2000/-ம் சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினியையும் இவ்வரசு வழங்குகிறது.
மாணவ, மாணவியர் நலன் கருதி இவ்வரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை மாணவ, மாணவியர்கள் நன்கு பயன்படுத்தி, தங்கள் வாழ்வில் மென்மேலும் உயர இந்த “”"” கல்வி உரிமை நாளில்”" நான் வாழ்த்துகிறேன்.

ஜெ.ஜெயலலிதா,
தமிழக முதலமைச்சர்.

Follow

Get every new post delivered to your Inbox.