எம்மை அணுக
இலக்கியம் என்றாலே பல்ர் அதனை படித்து சுவைப்பதற்கு தம்மால் இயலாது என்று எண்ணி விடுகின்றனர். எளிய தமிழில் நல்ல இலக்கியங்களை வெளியிட்டால் அனைவரும் பயன்பெறுவர். எனவே, கவிதை, கதை, கட்டுரைகளை இதில் எழுத விரும்புவோர் எளிய தமிழில் படைத்து cinthakulam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நாட்டு வெங்காயம் என்ற தலைப்பில் அன்றாட செய்திகள் விருப்பு வெறுப்பின்றி வெளியிடப்படும். பள்ளிகளில் பிரார்த்தனை நேரங்களில் கூறும் வண்ணம் செய்திகள் அமைதல் வேண்டும் என்பதே ஒரே நிபந்தனை.
கதை என்ற தலைப்பில் எழுதும் முன் ‘எப்படி கதை எழுதுவது’ என்று குமுதத்தில் வந்த தொடரை படித்து விடுவது நலம்.
கவிதை என்ற தலைப்பில் எழுதும் முன் சுஜாதா கணையாழியின் கடைசி பக்கங்களில் கூறிய அறிவுரைகளை பின்பற்றவும்.