ஒரு கவிதை மொழி பெயர்ப்பு

“In your light I learn how to love. In your beauty, how to make poems. You dance inside my chest where no-one sees you, but sometimes I do, and that sight becomes this art.” — Mawlana Jalal-al-Din Rumi

உன் கண்ணொளிதான் கற்றுத் தந்தது

காதல் இதுதான் என்று

உன் அழகுதான் கற்றுத் தந்தது

கவிதை இதுதான் என்று

என் நெஞ்சில் ஆடும் உன்

நடனத்தை வேறு யார் பார்க்காவிட்டாலும்

சில சமயம் விழும் என் பார்வையே

நான் கற்ற இந்தக் கல்வி.

- மவுலானா ஜலால் – அல் – தின் ரூமி.

இரு கவிதைகள்

http://easytamil.blogspot.com/2010/06/blog-post.html

http://easytamil.blogspot.com/2010/06/blog-post_12.html

வேற்று மொழிக் கவிதைகளின் தழுவல்

இங்கு வேற்று மொழிக் கவிதைகளை தழுவி எளிய தமிழில் கவிதை எழுதவிருக்கிறேன்.
மூலக் கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளியிடப் படும். எனது தமிழ் புலமையும் கவிதைப் புலமையும் குறைவு என்றாலும் ஆர்வ மிகுதியாலும் எனது நண்பன் பாஸ்கர் மற்றும் இட்லிவடை இன்பா போன்றோர் ஊக்குவித்ததால் எழுதத் தொடங்குகிறேன்.
இது மொழிபெயர்ப்பு அன்று. வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பு செய்யவில்லை. தழுவலே. சொற்குற்றம், பொருட்குற்றம் இருப்பின் மன்னிக்க. திருத்தி பின்னூட்டம் இட்டால் வரவேற்கிறேன்.
எமிலி டிக்கன்ஸின் கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது.
I Cannot Live With You
by Emily Dickinson

I cannot live with you,
It would be life,
And life is over there
Behind the shelf

The sexton keeps the key to,
Putting up
Our life, his porcelain,
Like a cup

Discarded of the housewife,
Quaint or broken;
A newer Sevres pleases,
Old ones crack.

I could not die with you,
For one must wait
To shut the other’s gaze down,
You could not.

And I, could I stand by
And see you freeze,
Without my right of frost,
Death’s privilege?

Nor could I rise with you,
Because your face
Would put out Jesus’.
That new grace

Glow plain and foreign
On my homesick eye,
Except that you, than he
Shone closer by.
அதன் தழுவல் கீழே தரப்பட்டுள்ளது.

வாழவே மாட்டேன்
உன்னுடன் சேர்ந்து வாழ்வதுதான்
வாழ்க்கை என்றால்,
வாழவே மாட்டேன்
ஆனால்
என்ன செய்வது?
சித்ர குப்தனிடம்
உள்ளது நம்
வாழ்க்கை.

பானை பிடித்தவள்
பாக்கியசாலி என்றாலும்
சுட்ட பானை என்றாலும்
உடைந்தது உடைந்ததுதானே

வாழவே மாட்டேன்
உன்னுடன் சேர்ந்து வாழ்வதுதான்
வாழ்க்கை என்றால்,
வாழவே மாட்டேன்

சாகவும் மாட்டேன்
உன்னுடன் சேர்ந்து சாகவும் மாட்டேன்.
இறந்தபிறகு என்
கண்களை மூடுவது யார் விரல்கள்?
சாகவும் மாட்டேன்
உன்னுடன் சேர்ந்து சாகவும் மாட்டேன்.

கொஞ்சம் தள்ளி
எரியட்டும் சுள்ளி
வெந்து சாம்பல்
ஆகட்டும் என் உடல்
நின்று பார்
போகுமா என் ஆவி?
உன்னை வெல்லுமா
என் மரணம்?

பிறக்க முடியாது
மீண்டும் உன்னோடு நான்
பிறக்க முடியாது
சாவித்திரியாய் நீ
சத்தியவான் இல்லை நான்.

- கோவை.சு.வீரராகவன்.

Follow

Get every new post delivered to your Inbox.