ஈகரை கோலாகலப் போட்டிகள்…முழுமையான அறிவிப்பு!
அன்பு உறவுகளே…
ஈகரையின் நாயகன் சிவாவின் அன்பார்ந்த அறிவிப்புக்கள் கவிதைப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி தொடர்பாக வெளிவந்துள்ளன…
கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள்…!
1. ஈகரை சிறக்க…..
2. மீண்டுமொரு யுத்தம் ஈழத்தில் வேண்டுமா நித்தம்?
3. பெண்ணாய்ப் பிறந்திட….
4.சித்த மருத்துவம் எல்லா நோய்க்கும் தீர்வாகுமா?
5.முதியோர் இல்லங்கள் பெருக காரணம்?
6.இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள் – சாத்தியமா?
7.தியானமும் யோகமும் – ஒருபார்வை
8. பெண் சிசுக்கொலை – தீர்வுதான் என்ன…?
9.கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள்…!
கட்டுரைப்போட்டிக்கான விதிமுறைகள் :
1. இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
2. ஒவ்வொரு தலைப்பிலும் ஒருவர் தலா ஒரு கட்டுரையை எழுதலாம்
3. கட்டுரைகள் 1000 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
4. சொந்தக் கட்டுரைகள் மற்றும் இதற்குமுன் எங்கும் வெளியிடப்படாத படைப்புக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
5. போட்டியாளரின் விவரங்கள் கட்டுரையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
6. விதிமுறைகளை மீறும் படைப்புக்கள், எந்தவித அறிவிப்பும் இன்றி நீக்கப்படும்.
7. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
கவிதைப் போட்டிக்கான தலைப்புகள்…!
1. ஈழம் என்று மலரும்?
2. சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? – ஈழம்!
3. பிரியாத வரமொன்று வேண்டும்…!
4. தொலைதூரக் காதல்!
5. ஈகரைத் தாய்…!
6. பெண்ணுக்குள் பூகம்பம்…!
7. அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்!
8. தமிழுக்கு அமுதென்று பேர்…!
9. இனி ஒரு பிறவி வேண்டாம்…!
கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள் :
1. இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
2. ஒவ்வொரு தலைப்பிலும் ஒருவர் தலா ஒரு கவிதையை எழுதலாம்
3. கவிதைகள் 10 வரிகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
4. சொந்தக் கவிதைகள் மற்றும் இதற்குமுன் எங்கும் வெளியிடப்படாத படைப்புக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
5. போட்டியாளரின் விவரங்கள் கவிதையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
6. விதிமுறைகளை மீறும் படைப்புக்கள், எந்தவித அறிவிப்பும் இன்றி நீக்கப்படும்.
7. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
இரண்டு போட்டிகளுக்கும் பரிசுத்தொகை கீழ்க்கண்ட வாறு வழங்கப்படுகிறது…!
முதல் பரிசு : ஐந்தாயிரம் ரூபாய்
இரண்டாம் பரிசு: மூவாயிரம் ரூபாய்
மூன்றாம் பரிசு: இரண்டாயிரம் ரூபாய்
இரண்டு போட்டிகளுக்கான படைப்புகள் அனுப்பவேண்டிய கடைசித்தேதி :
ஜூலை மாதம் 15 ஆம் நாள் (2010)நள்ளிரவு 12 மணி.
படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கும் நாள் : ஜூலை மாதம் 31,2010
கவிதை மற்றும் கட்டுரைகளை நண்பர்கள் இங்கு பதிய வேண்டாம்! கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். படைப்பாளரின் பெயர் நீக்கப்பட்டு உங்களின் படைப்புகளை நான் இங்கு பதிவேன். நடுவர்களும், உறுப்பினர்களும் உங்களின் படைப்புக்கு மதிப்பெண்கள் வழங்குவார்கள்! இறுதியாக மதிப்பெண்களின் அடிப்படையில் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்!
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்!
admin@sivastar.net