கல்வி உரிமை நாளைக் கொண்டாடுவோம்

// உண்மை நகல் //

ஜெ.ஜெயலலிதா
முதலமைச்சர் தலைமைச் செயலகம்,
சென்னை-600 009.

தேதி. 09.11.2011

வாழ்த்துச் செய்தி

அன்புள்ள மாணவ மணிகளே / உங்கள் அனைவருக்கும் என் வணக்கம்.

இந்தியத் திருநாட்டின் முதல் கல்வி அமைச்சராக இருந்து மறைந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 11 ஆம் நாள் ஆண்டுதோறும் “”"” தேசிய கல்வி நாள் “”"” என கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு முதல் இந்நாள், “”"” கல்வி உரிமை நாளாக”" கொண்டாடப்படவுள்ளது.
இந்தியத் திருநாட்டின் வருங்காலத் துhண்களாகிய நீங்கள் உங்களின் கல்வியறிவை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். கல்வியை விட மிக உயர்ந்த செல்வம் உலகில் வேறு ஏதுமில்லை, தமிழக அரசு, மாணவ, மாணவியரின் கல்வி வளர்ச்சிக்காக சத்துணவு, சீருடை, பாடப்புத்தகம் ஆகியவற்றை வழங்குவதுடன் கட்டணமின்றி பேருந்தில் பயணம் செய்யவும் வழிவகை செய்துள்ளது. மேலும், மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு மிதி வண்டியையும் வழங்குகிறது. அனைத்து பள்ளி வயது குழந்தைகளும் எளிதாக பள்ளிக்கு செல்லும் வகையில், அவர்களது குடியிருப்புக்கு அருகில் பள்ளிகளை ஏற்படுத்துவதோடு, தேவையான ஆசிரியர் பணியிடங்களையும் இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது.
மாணவ, மாணவியர்கள் தங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பினை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் பொருட்டு, இவ்வாண்டு முதல் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1500/-ம் 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு ரூ.2000/-ம் சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினியையும் இவ்வரசு வழங்குகிறது.
மாணவ, மாணவியர் நலன் கருதி இவ்வரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை மாணவ, மாணவியர்கள் நன்கு பயன்படுத்தி, தங்கள் வாழ்வில் மென்மேலும் உயர இந்த “”"” கல்வி உரிமை நாளில்”" நான் வாழ்த்துகிறேன்.

ஜெ.ஜெயலலிதா,
தமிழக முதலமைச்சர்.

இறந்த நாள்

 

இன்று எனது இறந்த நாள்

ஆம்.

45 அகவையில் இறந்து

46வது அகவையில் பிறந்தேன்.

ஒவ்வொரு கணமும்

இறந்த பின்னரே

அடுத்த கணம்

பிறக்கின்றது அல்லவா?

பெஸிமிஸ்ட் என்பவர்களே

நான் பெஸிமிஸ்ட் இல்லை

இந்த கணத்தில்

வாழ்கிறவன்

ஒவ்வொரு கணத்திலும்

புதுப்பித்துக் கொள்ளும்

நானா பெஸிமிஸ்ட்?

அடுத்த கணம்

இறப்பது திண்ணம்

என்றால் வருத்தம்

எதற்கு?

அதற்கடுத்த கணத்தில்

பிறப்பதும் திண்ணமே

எனும் எண்ணமே

இறப்பை விரும்புகிறது.

என்னை வாழ்த்தாதீர்கள்.

வசையொழிய வாழ்பவனல்ல நான்

வசையே எனக்கு ஊக்கத்தை தருகிறது.

வசையே எனது இசை.

சாவே உனக்கொரு நாள்

சாவு வந்து சேராதோ என்றான் கண்ணதாசன்.

காலனே அருகில் வாடா

காலால் மிதிக்கிறேன் என்றான் முண்டாசு கவிஞன் பாரதி.

நெருநல் உளனைப் பற்றி எழுதினான் வள்ளுவன்.

இன்று இக்கணத்தில்

இக்கணத்தை முழுமையாக

அனுபவித்து வாழும்

என்னைப் பாட வந்தது இயற்கை.

ஒவ்வொரு கணமும்

மாறிக் கொண்டிருப்பதுதான் இயற்கை.

நீ பார்க்க வேண்டும் என்று நினைத்து

பின்னர் பார்ப்பதற்குள்

இலையின் நிறமே மாறி விடுகிறது.

அந்த மாற்றத்தை அறிந்து விட்டால்

ஒவ்வொரு கணமும்

நான் இறப்பதில் மகிழ்ச்சியே எனக்கு.

சோதனைப் பதிவு

ஏனோ தெரியவில்லை. இப்போது எழுதும் பதிவுகள் பதிப்பிக்க முடியவில்லை

சங்கப் பலகையில் இடம்

எனது உதகை காவிய முகாம் அனுபவங்களின் தொகுப்பு கிரி அவர்களின் இணையத்தில் பதிவு செய்திருக்கிறேன்.

திரு.ஜெய மோகன் அவர்களின் இணையத்தில் அறிவிப்பு செய்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அனுபவங்கள் முதற் பகுதி

அனுபவங்கள் இரண்டாம் (இறுதிப்) பகுதி

விரிவான கட்டுரைகள் அடுத்த வாரம் தொடங்குகிறது.

உதகை காவிய முகாம்

எனது உதகை காவிய முகாம் அனுபவங்களை நண்பர் கிரி அவர்கள் தமது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

பதிவினை சிரமம் பாராமல் சிரத்தையுடன் செப்பனிட்ட பாஸ்கருக்கும் வெளியிட்ட கிரி அவர்களுக்கும் நன்றி.

தொடர்களின் அட்டவணை

கீழ்க் கண்ட அட்டவணைப் படி தொடர்களை எழுதப் போகிறேன்.

திங்கள் – மணிமேகலை இயம்பும் கணிதம்.

செவ்வாய் – அந்த நாளும் வந்திடாதோ

புதன் – சித்தர் பாடல்களிலிருந்து நான் புரிந்து கொண்டது

வியாழன் – பைபிளில் நான் புரிந்து கொண்டது

வெள்ளி – ஜவ்வாது மலை

சனி – கீதையிலிருந்து நான் புரிந்து கொண்டது

ஞாயிறு – திருமந்திரத்தில் நான் புரிந்து  கொண்டது

முன்னோட்டம்

இனி பதிவேற்றப்படும் பதிவுகளை பற்றிய முன்னோட்டம்.
க. பாரம்பரியத்தை தொலைத்துவிட்டு தொலைக் காட்சியில் பொழுது போக்குபவர்கள் – ஜவ்வாது மலை வாழ் மக்களைப் பற்றிய ஒரு பார்வை.
உ. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் தொடரும் தவறு – தினமணி செய்தி – ஒரு கண்ணோட்டம்.
ங. மணிமேகலையில் கணிதம் – ஒரு சிறப்பு பார்வை
ச. கீதையிலிருந்து நான் புரிந்து கொண்டது – ஒரு தொடர் பார்வை.
இவ்வாரத்தில் மேற்கண்ட இடுகைகளை எதிர்பாருங்கள் வழக்கமான கவிதை தழுவல்களோடு.

அமுதுக்கும் தமிழ் என்று பெயர்

வணக்கம். நலமா? தமிழ் கடலில் நீந்த ஆர்வம் கொண்ட அனைவரும் தங்கள் கதை, கவிதை, கட்டுரைகளை பதிவிட வாருங்கள். தமிழில் முன்னர் மூன்று தமிழ் சங்கங்கள் இருந்தன.
இன்றைய கால கட்டத்தில் செந்தமிழின் அருமையையும் கூட யாப்பிலக்கண விதிகளை மீறும் புதுக் கவிதையிலும்
இசைத் தமிழுக்கே உரிய இசைக் கருவிகளை தவிர்த்து
மேற்றிசையில் செந்தமிழை கொடுந்தமிழாய் உச்சரிப்பவர்களை பாடவைக்கும் அவலம் நடக்கிறது.
இந்த நிலை மாற தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வணக்கம் தமிழா!

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

Follow

Get every new post delivered to your Inbox.