மணிமேகலை இயம்பும் கணிதம் – 2

பத்து அளவைக்கும் (பிரமாணங்கள்) ஒவ்வாது என்று விலக்கப் பட்ட குற்றங்கள் (ஆபாசங்கள்) எட்டு உள்ளன. அவை சுட்டுணர்வு, திரியக் கோடல், ஐயம், தேராது தெளிதல், கண்டு உணராமை, எய்தும் இல் வழக்கு, உணர்ந்ததை உணர்தல், நினைப்பு ஆகும்.

சுட்டு உணர்வு

எல்லாப் பொருள்களின்  வெளித் தோற்றம் மட்டுமே உணர்தல்; உள்ளுணராமை. இதுவே நிருவிகற்பக் காட்சி எனப்பட்டது.

திரியக் கோடல்

காணப்பட்ட ஒரு பொருளை பிறிதொன்றாக உணரல். விரிந்த ஒளிக்கதிர்களுடைய சிப்பியை வெள்ளி என்று உணர்ந்து கொள்ளுதல். இதனை விபரீதக் காட்சி என்றும் கூறுவர்.

ஐயம்

காணப்பட்ட ஒரு பொருளை இன்னது என்று துணியாமைக்கு ஏதுவாக நிற்கும் மயக்கம் ஆகும்.

தேராது தெளிதல்

தெளிதற்குரிய ஏது வகையால் தெளியாது தேறுதலும், தேராது தெளிதலும் ஆகிய குற்றமாகும்.

கண்டு உணராமை

காண்பதற்குரிய அளவையும் கருவியும் கொண்டு பொருளைக் கண்டவிடத்து

எய்தும் இல் வழக்கு

இல் வழக்கு என்பது முயற் கொம்பு, ஆகாயப் பூ என்பன போன்ற இல்லாத பொருள்களை சொல் வழக்கால் உண்டென உள்ளத்தில் உணர்தல் ஆகிய குற்றமாகும்.

உணர்ந்ததை உணர்தல்

உணர்ந்த்தை உணர்தல் என்பது முன்பே உணர்ந்திருக்கும் ஒன்றை மீண்டும் உணர்தலாகிய குற்றமாகும். இது மறதி அன்று. குளிருக்கு வெப்பம் மாறுபட்டது என்பதை ஏற்கனவே உணர்ந்து இருந்தும், மிக்க பனிக்கு நெருப்பருகே சார்ந்திருத்தல் மருந்தாகும் என்பதை எவ்வளவு அதிகமான பனியானாலும் மீண்டும் அளவையால் ஆராய்ந்து தெளிவது குற்றமாகும்.

நினைப்பு

நினைப்பு என்பது பிறர் கூறுவனவற்றைக் காரண காரிய ஆராய்ச்சி இன்றி மேற்கொள்ளுதலாகும்.

குறையொன்று உளது கோவிந்தா

வழக்கமான பதிவுக்குப் பதிலாக உடனே கள்ளிப் பெட்டியிலிருந்து எடுத்த பதிவு
இதன் அடுத்த இறுதிப் பகுதி நாளை வரும். பின்னர் வழக்கமானத் தொடர்கள் தொடரும்

An Essay on Criticism

Alexander Pope


‘Tis hard to say, if greater Want of Skill
Appear in Writing or in Judging ill,
But, of the two, less dang’rous is th’ Offence,
To tire our Patience, than mis-lead our Sense:
Some few in that, but Numbers err in this,
Ten Censure wrong for one who Writes amiss;
A Fool might once himself alone expose,
Now One in Verse makes many more in Prose.

சொல்ல முடியுமா எது பெரிது?

எழுதிப் பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்

குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்கள்…

இதில் அவர் எந்த வகை?

ஒன்று நிச்சயம் ஐயா.

பொறுத்தலுக்கும் எல்லை காணின்

இன்பத்திற்கோர் எல்லை கண்ட பாரதி கதிதானே?

‘Tis with our Judgments as our Watches, none
Go just alike, yet each believes his own.
In Poets as true Genius is but rare,
True Taste as seldom is the Critick’s Share;
Both must alike from Heav’n derive their Light,
These born to Judge, as well as those to Write.
Let such teach others who themselves excell,
And censure freely who have written well.
Authors are partial to their Wit, ’tis true,
But are not Criticks to their Judgment too?

சங்கம் வளர்த்ததா தமிழை?

சமணர் எண்மர் ஏறிய கழுமரம் தந்த இடமோ?

பலகை கொண்ட சங்கங்களையும்

முதலோ, இடையோ, கடையோ

கிடைத்தது தாத்தா சேர்த்த சொத்துதானே?

நீரா சம்பாதித்தீர்?

கொண்டு வந்தீரோ உமது தோண்டி?

கூத்தாடி கூத்தாடி போட்டுடைக்கிறீரே?

Yet if we look more closely, we shall find
Most have the Seeds of Judgment in their Mind;
Nature affords at least a glimm’ring Light;
The Lines, tho’ touch’d but faintly, are drawn right.
But as the slightest Sketch, if justly trac’d,
Is by ill Colouring but the more disgrac’d,
So by false Learning is good Sense defac’d.
Some are bewilder’d in the Maze of Schools,
And some made Coxcombs Nature meant but Fools.
In search of Wit these lose their common Sense,
And then turn Criticks in their own Defence.
Each burns alike, who can, or cannot write,
Or with a Rival’s or an Eunuch’s spite.
All Fools have still an Itching to deride,
And fain wou’d be upon the Laughing Side;
If Maevius Scribble in Apollo’s spight,
There are, who judge still worse than he can write

எழுதிச் செல்லும் விதி

எழுதி எழுதி மேற்செல்லும்.

கணித விதியா தெரியாதென விலகுவதற்கு?

கருப்பு கண்ணாடி கொண்டு பார்த்தால்

குற்றம் பொருளிலா?

ஏதிலார் தம் குற்றம் காண்பரோ?

விடமுண்ட கண்டனுக்கே

துப்பவும் முடியவில்லை

விழுங்கவும் இயலவில்லை

புழுங்குவது நான் மட்டுமோ?

தராசின் தட்டுகளுக்கோ

முள்ளின் உத்தரவு

பிடித்து தூக்கும் கையை

குத்த யார் உத்தரவு?

அந்த முள்ளுக்கும்

மோகமோ கையின் மீது?

ஜெயம் யாருக்கு?

Some have at first for Wits, then Poets past,
Turn’d Criticks next, and prov’d plain Fools at last;
Some neither can for Wits nor Criticks pass,
As heavy Mules are neither Horse or Ass.
Those half-learn’d Witlings, num’rous in our Isle,
As half-form’d Insects on the Banks of Nile:
Unfinish’d Things, one knows now what to call,
Their Generation’s so equivocal:
To tell ‘em, wou’d a hundred Tongues require,
Or one vain Wit’s, that might a hundred tire.

எச்சரிக்கை தோழனே !

குட்டுவதால் சாத்தனார்

நாட்டினார் ஒரு பாட்டுடை செய்யுள்

இதிலேயே தீர்ந்து விடாது ஆயுள்.

கோவலன் மாண்டு விட்டதால்

முடிந்ததா கதை?

எரிந்தது மதுரை.

புரிந்தது மணிமேகலையின் அறம்.

உருத்து வந்து ஊட்டும் ஊழ்வினை.

பொறுத்திருப்போம்.

But you who seek to give and merit Fame,
And justly bear a Critick’s noble Name,
Be sure your self and your own Reach to know.
How far your Genius, Taste, and Learning go;
Launch not beyond your Depth, but be discreet,
And mark that Point where Sense and Dulness meet.

ஆயினும் ஒன்று சொல்வேன் உலகத்தீரே

இப்படியும் எழுத வேண்டி

உயிர் வாழ்தல் வேண்டின்

பரந்து கெடுக் இவ்விதியை இயற்றியான்.

மேலும் தொடர்வேன் அடுத்த பதிவில்…

 

உதகை காவிய முகாம்

எனது உதகை காவிய முகாம் அனுபவங்களை நண்பர் கிரி அவர்கள் தமது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

பதிவினை சிரமம் பாராமல் சிரத்தையுடன் செப்பனிட்ட பாஸ்கருக்கும் வெளியிட்ட கிரி அவர்களுக்கும் நன்றி.

அந்த நாளும் வந்திடாதோ – 2

இந்த சமயத்திலிருந்தே கதை கேட்கும் ஆர்வமும், கதை சொல்லும் ஆர்வமும் எனக்கு ஏற்பட்டது. எப்படி என்பதை விளக்குவதுதான் இந்த வாரம்.

என் தந்தையாருக்கு ஒரு தமக்கை இருந்தார்கள். சிறு வயதிலேயே துறவறம் பூண்டு ஆந்திராவில் இராஜ முந்திரி அருகே ஒரு கன்னிமாடத்தில் இருந்தார்கள். அவர்கள் வருடம் ஒரு முறை இந்தியா முழுவதும் இலவசமாக இரயிலில் சென்று வர அரசு சலுகை அளித்திருந்தது. அவர்கள் அதைப் பயன்படுத்தி எங்கள் வீட்டிற்கு மட்டுமே வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு முறை வரும்போது மிக நீண்ட கதைகள் சொல்வார். அவற்றுள் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி கதை உண்டு. மேலும் கதைக்குள் கதை என பல சிக்கல்களைக் காண்பித்து ஒவ்வொன்றாக அவிழ்ப்பார்.

அவரிடமிருந்துதான் எனக்கு கதை கேட்கும் ஆர்வம் ஏற்பட்டது. மேலும் என் வீட்டில் அனைவருக்கும் புத்தகம் படிக்கும் ஆர்வம் இருந்தது. அக்காலத்தில் மற்றவர்கள் வானொலி கேட்டுக் கொண்டிருந்த போது என் வீட்டில் அனைவரும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகங்களோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.

எங்கள் வீட்டில் உள்ள அலமாரிகளிலும், பெட்டிகளிலும், சிறுகதை, நாவல்கள் மட்டுமல்ல, பரணிதரனின் பயணக் கட்டுரை நூல்கள் முதல், மறைமலை அடிகளாரின் மரணத்தின் பின் மனிதர் வாழ்க்கை, ஆய்வுக் கட்டுரைகள் என பலவற்றையும் தொகுத்து வைத்திருந்தோம். ஏறக்குறைய 3500 – 4000 புத்தகங்கள்.

நானும் முத்து காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தேன்.

தொடர்களின் அட்டவணை

கீழ்க் கண்ட அட்டவணைப் படி தொடர்களை எழுதப் போகிறேன்.

திங்கள் – மணிமேகலை இயம்பும் கணிதம்.

செவ்வாய் – அந்த நாளும் வந்திடாதோ

புதன் – சித்தர் பாடல்களிலிருந்து நான் புரிந்து கொண்டது

வியாழன் – பைபிளில் நான் புரிந்து கொண்டது

வெள்ளி – ஜவ்வாது மலை

சனி – கீதையிலிருந்து நான் புரிந்து கொண்டது

ஞாயிறு – திருமந்திரத்தில் நான் புரிந்து  கொண்டது

மணிமேகலை இயம்பும் கணிதம்

சமண நூலாகிய மணிமேகலையில் மணிமேகலை சமயவாதிகளுடன் உரையாடியதில் சமணர்கள் மட்டுமல்ல, அறு சமயத்தினரின் அன்றைய கணிதப் பயன்பாடுகளையும் கணித அறிவின் வளர்ச்சியையும் அறிய முடிகிறது.

*******************************************************************

27. சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை

நவை அறு நன் பொருள் உரைமினோஎன

சமயக் கணக்கர் தம் திறம் சார்ந்து

வைதிக மார்க்கத்து அளவை வாதியை

எய்தினள் எய்தி நின் கடைப்பிடி இயம்புஎன

வேத வியாதனும் கிருதகோடியும்

ஏதம் இல் சைமினி எனும் இவ் ஆசிரியர்

பத்தும் எட்டும் ஆறும் பண்புறத்

தம் தம் வகையால் தாம் பகர்ந்திட்டனர்

*************************************************************

  1. வேதங்களை நான்காக பகுத்தவர் வேத வியாசர். உத்தர மீமாஞ்சை எழுதியவர்.
  2. போதாயனர் என்னும் கிருதக் கோடி.
  3. பூருவ மீமாஞ்சை எழுதிய சைமினி

மேற்குறிப்பிட்டுள்ள மூவரும் அளத்தற்குரிய பொருளை அளந்து காட்டக் கூடிய அளவைகளாக பத்து அளவை, எட்டு அளவை, ஆறு அளவை எனக் கூறியிருக்கின்றனர். அவை வருமாறு:

1.காட்சி அளவை (பிரத்தியட்சம்)

2.கருத்தளவை (அனுமானம்)

3.உவம அளவை (உவமம்)

4.ஆகம அளவை (சத்தம்)

5.அருத்தா அளவை (அருத்தாபத்தி)

6.இயல்பு அளவை (சுபாவம்)

7.ஐதிக அளவை (ஐதிகம்)

8.அபாவ அளவை (இன்மை)

9.மீட்சி அளவை (பாரிசேடம்)

10.உள்ள நெறி அளவை (சம்பவம்).

இவற்றை சுருக்கமாக முதலில் மணிமேகலை இயம்பியதை எழுதிவிட்டு பின்னர் விரிவாக ஒவ்வொன்றாக அலசி ஆய்ந்து பார்க்க உத்தேசித்துள்ளேன்.

  1. காட்சி அளவை

************************************************************

மருள் இல் காட்சி ஐ வகை ஆகும்

கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும்

நண்ணிய மூக்கால் நாற்றமும் நாவால்

சுவையும் மெய்யால் ஊறும் எனச் சொன்ன

இவை இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று

துக்கமும் சுகமும் எனத் துயக்கு அற அறிந்து

உயிரும் வாயிலும் மனமும் ஊறு இன்றி 27-020

பயில் ஒளியொடு பொருள் இடம் பழுது இன்றி

சுட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாது

88

கிட்டிய தேசம் நாமம் சாதி

குணம் கிரியையின் அறிவது ஆகும்

**********************************************************

மருட்சிக்குச் சிறிதும் இடமில்லாமல் பொருட்களை நேரில் கண்டு அறியும் காட்சி அளவை ஐந்து வகைப்படும். கண்ணால் நிறமும், செவியால் ஓசையும், மூக்கால் மணமும், நாவால் சுவையும், மெய்யால் (உடலால்) ஊறும் அறிதலாகிய ஐந்து வகையாகும். இவற்றைக் கண்டும், கேட்டும், முகர்ந்தும், உண்டும், உற்றும் அறிந்து, ஐம்பொறிகளும் இயங்க வேண்டும். அவ்வாறு இயங்க ஞாயிறு, திங்கள், தீ ஆகியவற்றின் ஒளி துணையாகும்.

பொறிகளின் வாயிலாகக் காட்சி நிகழும்பொழுது காணப்படும் பொருளையும் இடத்தையும் குற்றமின்றி இயைய வைத்து,

சுட்டல் (தோற்றத்தின் உண்மை மாத்திரம் காணுதல்)

திரிதல் (பிறிதொன்றாக்க் காணல்)

ஐயுறுதல் (இன்னதென்று துணியாது மயங்கல்) ஆகிய குற்றங்கள் இன்றி

காணப்படும் பொருள், சார்ந்துள்ள இடம், பெயர், சாதி, குணம், தொழில் ஆகியவற்றால் சிறப்புறக் காண வேண்டும்.

இதுவே காட்சி அளவை.

காட்சியால் தெளிவடைதல் கருத்தை உயர்த்தும்.

  1. கருத்தளவை

*************************************************************

கருத்து அளவு ஆவது

குறிக்கொள் அனுமானத்து அனுமேயத்

தகைமை உணரும் தன்மையது ஆகும்

மூ வகை உற்று அது பொது எச்சம் முதல் ஆம்

பொது எனப்படுவது சாதன சாத்தியம்

இவை அந்நுவயம் இன்றாய் இருந்தும் 27-030

கடம் திகழ் யானைக் கான ஒலி கேட்டோன்

உடங்கு “எழில் யானை அங்கு உண்டு” என உணர்தல்

******************************************************************************

கருத்தளவை என்பது குறித்த, அனுமானத்தால் சாதிக்கப்படும் பொருளின் உண்மைத் தன்மையை உணர்த்துவதாகும்.

உதாரணமாக ‘பிளிறுகின்ற ஒலி கேட்டதால் காட்டில் யானை உண்டு’ என்கிறபோது

‘காட்டில் யானை உண்டு எனத் துணியப்படுவது மேற்கோள் (அனுமேயம்) ஆகும்.

‘பிளிறுகின்ற ஒலி கேட்டது’ அம்மேற்கோளைச் சாதிக்கும் ஏது (காரணம்).

‘பிளிறொலி’ அவ்வேதுவுக்கு நிலைக் களம். அதுவே குறி என்றும் சொல்லப்படும்.

ஏதுவைக் கொண்டு சாதிக்கும் திறமே அனுமானம் எனப்படும்.

கருத்தளவை பொது, எச்சம், முதல் – மூன்று வகைப்படும்.

இவையே வடமொழியில் சாமானியதா திருட்டம், சேடம், பூருவம் என்று கூறப்படும்.

இவற்றில் பொதுக் கருத்தளவை என்று கூறப்படுவது, ஏதுவும் மேற்கோளும் ஆகிய இரண்டுக்கும் காரண காரியத் தொடர்பால் ஏற்படும் உடன் நிகழ்ச்சி இல்லாதிருந்த போதிலும் காட்டில் யானையின் பிளிறொலி கேட்டவர் உடனே அங்கு உயர்ந்த யானை ஒன்று இருக்கின்றது என்று உணர்வதே ஆகும். மேலும், பிளிறொலி கேட்டவுடனேயே யானை இருப்பதை உணர்வதோடு அதற்குக் கொம்பு உண்டு, வால் உண்டு, பெரிய உருவம் என்று உணர்வதும் பொதுக் கருத்தளவை ஆகும்.

*******************************************

எச்சம் என்பது வெள்ள ஏதுவினால்

நிச்சயித்து அத் தலை மழை நிகழ்வு உரைத்தல்

முதல் என மொழிவது கருக்கொள் முகில் கண்டு

“இது மழை பெய்யும் என இயம்பிடுதல்

என்னும் ஏதுவின் ஒன்று முக் காலம்

தன்னில் ஒன்றில் சார்ந்து உளதாகி

மண்ட உயிர் முதல் மாசு இன்றாகி

காண்டல் பொருளால் கண்டிலது உணர்தல்

*******************************************

எச்சக் கருத்தளவையாவது இங்கு வெள்ளம் வருவதாகிய காரணத்தை (ஏதுவை)க் கொண்டு அங்கே மேலிடத்தில் மழை பெய்திருத்தலை துணிந்து கூறுதலாகும். மழையினது எச்சம் வெள்ளம் ஆதலால் வெள்ளமாகிய ஏதுவைக் கொண்டு சாதிக்கும் கருத்தளவை எச்சக் கருத்தளவை எனப்பட்டது. இதுவே காரியானுமானம் (காரியம் + அனுமானம்) என்றும் கூறப்படும்.

முதல் கருத்தளவை என வழங்குவது நீர்க் கொண்ட கருமுகில் கண்டு இது மழை பெய்யும் என்று துணிந்து கூறுவதாகும். மழை பெய்வதற்கு முகில் காரணமாதலால் இவ் வளவை முதல் கருத்தளவை எனப்பட்டது. இதுவே காரணானுமானம் (காரணம் + அனுமானம்) எனவும் கூறப்படும்.

காட்சி அளவை நிகழ்காலத்திற்கே உரியது. ஆனால் கருத்தளவை முக்காலத்திற்கும் உரியது. காணப்படும் பொருளைக் கொண்டு மாட்சிமைப்பட்ட உயிராகிய முதல் காணப்படாத பிறிதொரு பொருளை குற்றம் ஏதும் இல்லாமல் அறிவது அனுமானம் ஆகும்.

ஒரு நிஜ ஹீரோ

Posted on 18 June 2011.
மாரிச்செல்வம்

சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு (SSLC) முடிவுகள் பரபரப்பாக வெ ளியாகிக்கொண்டிருந்த நேரம். தேர்வு எழுதிய மாணவர்கள் எல்லாம் தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ள இணையத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, தன் தாயார் சண்முகத்துடன் முதல் நாள் மூட்டிவைத்த கரிமூட்டதில் இருந்து கரி அள்ளிக்கொண்டிருந்தான் மாரி. அவனும் இந்த முறை SSLC தேர்வு எழுதியவன்தான். ஆனால் முடிவுகளைத் தெரிந்துகொள்ள அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
“மாரி… யாரோ உன்னத் தேடி வந்திருக்காங்க…” என்று அவனுடைய மூன்றாவது அக்கா பானுப்ரியா சொல்ல, அள்ளிப்போட்டுக்கொண்டிருந்த கரியை அப்படியே வைத்துவிட்டு வந்தவனை, அவனுடைய பள்ளி நண்பர்கள் வாரி அணைத்துத் தூக்கிக்கொண்டனர். “மாரி! நீ 490 மார்க் எடுத்திருக்கடா! District First டா…” என்று கூறி அவனைத் தூக்கிக் கொண்டாடியபோது, எதுவும் புரியாவிட்டாலும் தன் மகன் ஏதோ சாதித்துவிட்டான் என்று உணர்ந்து கண்கள் கலங்கி நின்றார் மாரியின் தாய் சண்முகம்.
மாரி என்கின்ற மாரிச்செல்வம், இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூக்கையூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவன். அந்த மாவட்டத்து மக்கள் பலருமே கூடக் கேள்விப்பட்டிருக்காத ஒரு குக்கிராமத்தில் இருந்து படித்துக்கொண்டே, அந்த மாவட்டத்தின் முதல் மாணவனாக மதிப்பெண் பெற்ற அவனை, அடுத்த நாள் வந்த பத்திரிகைகள் அனைத்தும் மாவட்டச் செய்திகளில் பட்டியல் இட்டன. ஆனால் அவன் பரீட்சை எழுதியபோது அவனது குடும்பச் சூழ்நிலையை அறிந்தவர்கள் கொஞ்சம் வியந்துதான் போனார்கள். சோதனை மேல் சோதனையைத் தாங்கிக்கொண்டு, ஓர் ஏழைச் சிறுவனால் இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கமுடியுமா என தங்களுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டவர்கள் பலர்.
PAD நிறுவனத்தில் Christian Children Fund of Canada (CCFC) எனும் கிராமப்புறக் குழந்தைகளுக்கான உதவித்திட்டத்தில் உதவி பெற்றுவந்த மாரி, +1 சேர நிறுவன உதவி கேட்டு வந்தபோதுதான் PAD பணியாளர்களுக்கே, தேர்வெழுதிய சமயத்தில் மாரி சந்தித்த துயரங்கள் தெரியவந்தது.
மூக்கையூர் கிராமம்தான் மாரியின் சொந்த ஊர். எட்டாவது வரை அந்த ஊரில் உள்ள புனித யாக்கோபு நடுநிலைப் பள்ளியில் படிப்பை முடித்த மாரி, மேற்கொண்டு படிக்க அங்கிருந்து வேறு பள்ளிக்குச் செல்லவேண்டியிருந்ததால்,அதிலுள்ள கஷ்டங்களை உணர்ந்தவனாய், “அம்மா, நான் மேல படிக்கல. அப்பா கூடத் துணைக்குக் கடலுக்குப் போறேம்மா” என்று கூறினான். அதற்கு மேல் அவனைப் பேசவிடாமல் தடுத்த மாரியின் அப்பா முனியசாமி, “வேணாம் மாரி, நீ போய்ப் படி. அப்பா எல்லாத்தையும் பார்த்துகிறேன். நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் PAD-ல உனக்கு உதவி வாங்கித் தாராங்க… நல்லாப் படிக்கணும்யா. இப்படியெல்லாம் யோசிக்கக்கூடாது. உங்கக்கா பார்வதி நல்லாப் படிச்சாலும், எட்டாவதுக்கு மேல படிக்க உள்ளூர்ல ஸ்கூல் இல்லாததால படிக்க முடியாமப் போச்சுது. நீயாவது உன்னோட அக்கா வீட்டில போய் இருந்துகொண்டு மேல படிக்கப் பாரு. எப்படியாவது நம்ம வீட்டில நீயாவது படிச்சு நல்லாப் பிழைக்கணும். இதுதான் அப்பாவோட ஆசை” என்றார். அப்பாவின் வார்த்தைக்கு மறுப்பு ஏதும் கூறாமல் அவன் அக்காவின் வீடு இருக்கும் இராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள வேலாயுதபுரம் என்னும் கிராமத்துக்குச் சென்று, அங்கிருந்த புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தான் மாரி.
மாரியின் அப்பா முனியசாமி ஒரு கடல் கூலித் தொழிலாளி. யாரேனும் கடலுக்குப் போவதற்கு மேலதிகமாக ஆட்கள் தேவைப்பட்டால் முனியசாமியும் போவார். அது இல்லாத நாட்களில் சிறு வலையை எடுத்துக்கொண்டு கரையோர மீன்பிடித் தொழில் செய்வார். அவருக்கு மாரியைப் பற்றிப் பல கனவுகள் இருந்தன. தனது குடும்பத்தில் ஒருவராவது படித்து முன்னேறி வரவேண்டும் என்று அவர் கனவு கண்டார்.
ஐந்து பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைககளைக் கொண்ட பெரிய குடும்பம் அவருடையது. கடின உழைப்பும் ஒழுக்கமான வாழ்க்கையுமே அதீத வறுமை அந்தக் குடும்பத்தை அண்டவிடாமல் காத்தது. நான்கு பெண்களுக்கும், ஒரு மகனுக்கும் திருமணம் முடித்துவிட்டார். எஞ்சியிருப்பது மாரியும், இன்னொரு அக்கா பானுப்ரியாவும்தான். மாரியைப் படிக்க வைக்கவேண்டும், சொந்தமாக ஒரு வள்ளம் வாங்கவேண்டும் என்று தன்னுடைய கனவுகளை அடைய இரவும் பகலுமாயக உழைத்துக்கொண்டிருந்த முனியசாமிக்கு மூளையில் கட்டி வந்து பல வருடங்களாக அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் முத்துப்பேட்டையில் அக்கா வீட்டில் படித்துக்கொண்டிருந்த மாரி படிப்பில் கவனம் செலுத்தியதோடு விடுமுறை நாட்களில் அவன் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலைக்கும், மாமாவுடன் (அக்காவின் கணவர்) கடல் தொழிலுக்கும் சென்று குடும்ப பாரத்தையும் விரும்பிச் சுமந்தான். “மாரி, இப்படிப் படிச்சா நல்ல மார்க் எடுக்கமாட்ட! இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்காப் படிக்க பாரு” என்று அவனுடைய அக்கா முருகேஸ்வரி அவனைக் கட்டுப்படுத்தி வந்தார். முருகேஸ்வரி மாரியின் மூத்த அக்கா. அவருக்கும் மூன்று பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை. மாரியையும் தனது மகன் போலவே வளர்த்து வந்தார். வீட்டுக்கு மூத்த பெண் என்பதால் தன் தந்தை வீட்டின் அனைத்து நலன்களிலும் பங்கெடுத்துவந்தார். முருகேஸ்வரியின் கணவர் முனியனும் பரந்த மனம் படைத்தவர். இருவரும் சேர்ந்துதான் முருகேஸ்வரியின் சகோதரிகளின் திருமணங்களை முடித்து வைத்தனர்.
தேர்வுகள் எழுத இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் மாரியின் தந்தை மூளையில் இருந்த கட்டி காரணமாக, சிகிச்சை ஏதும் பலன் அளிக்காமல் இறந்துபோனார். துவண்டுபோன மாரியை மீண்டும் பள்ளிக்குப் படிக்க அனுப்பப் பெரும் பாடு பட்டார் தாய் சண்முகம். அதன்பின் குடும்பச் சுமை முழுதும் தாய் சண்முகம் தலையில் விழ, அவரும் மகள் வீட்டில் இருந்து விறகு வெட்டச் செல்வது, கூலி வேலைக்குச் செல்வது, கரிமூட்டம் எனப் பல வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார். வறுமையின் மத்தியில் தன் படிப்பைத் தொடர்ந்த மாரி தேர்வு எழுதத் தயாராகிக்கொண்டிருந்தான்.
தேர்வு நாளும் வந்தது. முதல் இரண்டு தேர்வுகளையும் எழுதி முடித்து வந்த மாரியிடம், “பரீட்சை நல்லா எழுதிருக்கியா மாரி?” என அக்கா கேட்டார். “ஆமாக்கா. இன்னிக்கு English II பேப்பர். இனிதான் மேத்ஸ் பேப்பர் வரும். அதை நாளை மறுநாள் எழுதணும்” என்று பதில் சொல்லிக்கொண்டே அக்காவின் முகத்தைப் பார்த்த மாரிக்கு ஏதோ சரியில்லை என்று பட்டது. “என்னக்கா! என்னாச்சு?” என்று அவன் பதற, “ஒண்ணுமில்ல மாரி, நெஞ்சு கரிச்சிக்கிட்டே இருக்கு. அசதியா இருக்கு. சித்த நேரம் தூங்குனா சரியாயிரும்” என்றார். “சரிக்கா, நீ போய் தூங்குக்கா” என்ற மாரி தானே சோறு போட்டுச் சாப்பிட்டுவிட்டு படிக்கச் சென்றுவிட்டான்.
அன்று இரவு அவன் அக்காவுக்குக் கடுமையான நெஞ்சுவலி. ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை செய்திருந்த முருகேஸ்வரி, ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்துவிட கதறி அழுத மாரியை, “நாளைக்குப் பரீட்சை எழுதணும்… நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் உங்கக்கா ஆசைப்பட்டா” என்று அனைவரும் தேற்றினர். “மாரி, நீ போய் பரீட்சை எழுதிட்டு வா. அதுக்குப் பிறகு இறுதிச் சடங்கு வச்சுக்கலாம்” என அவன் மாமா கூறவும், அவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, தன்னைத் தாயாக இருந்து பார்த்துக்கொண்ட சகோதரியின் பிணத்தருகே அழுதுகொண்டே படித்த மாரியை நினைத்து இப்போதும் கண்ணீர் வடிக்கிறார் அவன் தாய் சண்முகம்.”என்ன சார் மார்க் எடுத்தேன்.அம்மா மாதிரியிருந்த அக்கா சாவுக்கு அழக்கூட முடியாமல் பரீட்சைக்குப் படித்த பாவி சார்” என்று மாரி உடைந்து அழும் போது, நாமும் சேர்ந்து உடைய வேண்டிவருகின்றது.
அடுத்தநாள் அவன் பரீட்சை எழுதி முடித்துவிட்டு வரும்வரை அவனுடைய உறவினர்கள் காத்திருந்தனர். அவன் வந்ததும், அவனைக் கொண்டு அக்காவின் இறுதிச்சடங்குகளை நடத்தி முடித்தனர். சடங்குகள் அனைத்தும் முடிந்து, அடுத்த இரண்டு பரீட்சைகளையும் கனத்த இதயத்துடன் எழுதி முடித்தான் மாரி. பரீட்சைகள் முடிந்ததும் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலையில் இறங்கிவிட்டான்.
இந்த நிலையில்தான் அவனது தேர்வு முடிவுகள் வெளிவந்ததன.
அவனுடைய ஆசிரியர்கள், சக மாணவர்கள், அந்த ஊர் மக்கள் என் அனைவருக்குமே அவன் தேர்வு எழுதும்போது இருந்த நிலை நன்கு தெரியும். அப்படிப்பட்ட நிலையிலும் அவன் எடுத்த மதிப்பெண்கள் என்ன தெரியுமா? தமிழ் 95, ஆங்கிலம் 98, கணிதம் 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 98. சாதாரண நிலையில் இருக்கும் மாணவர்கள் இந்த மதிப்பெண்களை எடுக்கும்போதே ஆச்சரியப்படும் நமக்கு மாரியின் நிலையில் இருந்து பார்த்தால் பரிட்சையில் தேறுவோமா என்பதே சந்தேகம். அதிலும் அவனுடைய அக்காவின் இறுதிச் சடங்கன்று கணிதப் பரீட்சை எழுதி 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருப்பதை என்னவென்று சொல்வது? மாரியுடன் சேர்ந்து பரீட்சை எழுதிய அவனுடைய அக்கா மகள் நிர்மலாவும் 423 மதிப்பெண்கள் எடுத்து நல்ல முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள்.
இத்தனை இடர்களுக்கும் மத்தியில் தனது 10-வது வகுப்பை முடித்துவிட்டு +1 சேர இருக்கும் மாரிக்கு இன்னும் பிரச்னைகளும் துன்பங்களும் முடிந்தபாடில்லை. கடந்த சில வருடங்களாக மாரிக்கு ஓயாத தலைவலி. வறுமையும் அடுத்தடுத்து வந்த சோகச் சம்பவங்களும் உளவியல்ரீதியாக மாரியை மிகவும் பாதித்துள்ளது. தாங்கமுடியாத தலைவலியால் அவதியுறும் அவனை உள்ளூர் வைத்தியர்களிடம் காட்டியபோது பிரச்னை ஏதும் இல்லை எனச் சொல்லிவிட்டனர் கோயம்புத்தூரில் ஒரு மருத்துவரை அணுகி விசாரித்தபோது மாரியின் இருதயத்தில் பிரச்னை இருப்பதாகவும் அதைச் சரிசெய்ய சிறிது காலம் தேவை எனவும், அறுவை சிகிச்சை மூலம் அதைச் சரி செய்ய 21 வயதுவரை பொருத்திருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர். சிகிச்சைக்கு உதவ PAD தொண்டு நிறுவனம் உறுதி அளித்துள்ளது. அடுத்து Biology, Maths குரூப்பில் சேர்ந்து படிக்க விரும்பும் மாரி, இன்னும் எந்தப் பள்ளியில் சேர்வது, மேற்கொண்டு படிப்புக்கு என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறான். அத்துடன் அவனுடைய தாய் சண்முகத்துக்கும் உடல்நிலை சரியில்லை. குடும்ப பாரம் முழுவதையும் சுமந்துகொண்டிருக்கும் மாமா முனியன் பற்றிய கவலையும் மாரியை அரிக்கிறது.
இப்படிப் பல இடர்களுக்கு மத்தியிலும், தன் மனவலிகளையும் உடல்வலிகளையும் தாங்கிக்கொண்டு தனது அடுத்த சாதனைக்குத் தயாராகி விட்டான் மாரிச்செல்வம்…
O
மன்னார் வளைகுடா வாழ்க்கை என்னும் வலைப்பதிவில் வெளியாகியுள்ள இக்கட்டுரையை சாத்தியமுள்ள அனைத்துத் தளங்களுக்கும் எடுத்துச் செல்வதன்பொருட்டு இங்கே நன்றியுடன் மறுபிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. இக்கட்டுரையை உங்களுக்குத் தெரிந்த அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் படிக்கக் கொடுங்கள். அல்லது விஷயத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்

“ஏலி ஏலி லாமா சபக்தானி!!”

என் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களையும் தீர்மானித்தது நான் இல்லை. அடுத்த கட்டத்திற்கான எந்த எதிர்பார்ப்பையும் நான் வளர்த்துக் கொள்ளவில்லை. இதனால் எந்த குறிக்கோளும் இன்றி வாழ்ந்து வருகிறேன் என்பது ஒரு கட்டத்தில் நின்று யோசிக்கும்போது வியப்பு வரவில்லை. அச்சம்தான் ஏற்படுகிறது.

என் சிறிய வயதில் எனது வீட்டிற்கு என் தந்தையின் தமக்கை ஆந்திராவிலுள்ள இராஜ முந்திரியில் உள்ள கன்னிமாடத்தில் இருந்து வருடத்திற்கொரு முறை வருவார். ஆம் அவர் இளமையிலேயே கல்யாண வாழ்க்கையை வெறுத்து கல்யாணம் செய்து கொள்ளாமல் துறவறம் பூண்டு அங்கு சென்று வாழ்ந்து வந்தார்.

ஒவ்வொரு முறையும் எனக்கு இரு கதைகள் சொல்வார். ஒன்று ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி. இன்னொன்று புத்திமகுடன் கதை. இரண்டுமே நீண்ட பெருங்கதைகள். கதைக்குள் கதை என்று விரியும் கதையை அழகாக தெளிவாக கோர்வையாக சொல்வார். ஒரு வருடத்திற்குள் அதை மறந்துவிட்டு அல்லது மீண்டும் அவரது வாயிலிருந்து கேட்கும் வாயிலில் மறுபடி மறுபடி கேட்பேன். சலிக்காமல் ஒவ்வொரு முறையும் முதலிலிருந்து சொல்வார். அவர் தங்கியிருக்கும் பத்து பதினைந்து நாட்களுக்கும் இரவில் அவரது தூக்கத்தை நான் தொலைத்து இருக்கிறேன்.

எனக்கு கதை படிக்கவும், விரும்பவும் ஆரம்பித்தது இதனால்தான் என்று நினைக்கிறேன்.

என் வீட்டில் அனைவருக்கும் என் தாய் உட்பட கதை விரும்பிகள். இரண்டு பெரிய (உண்மையிலே மிகப் பெரிய) பெட்டிகளில் அடைக்கப்பட்ட நூற்றுக் கணக்கான கதைகளுக்கு அப்போதிலிருந்து நான் அடிமையானேன்.

முதலில் என்னை இராமலிங்க செட்டியார் மேனிலைப் பள்ளியில் சேர்ந்த போது அதுவரை ஐந்தாம் வகுப்பு வரை முதல் இரண்டு ரேங்கில் மட்டும் மாறி மாறி எடுத்துக் கொண்டிருந்தவன் முதல் பருவத் தேர்விலே அறிவியலில் பெயிலானதும் கணிதத்தில் கூட ஒற்றை மதிப்பெண் எடுத்ததும் எனக்கே என் மேல் பயம் ஏற்பட்டது.

எப்படி தேறப் போகிறேன்?

அந்த தேர்வு சமயங்களில் நான் நோய்வாய்பட்டிருந்தேன். அதற்கு காரணம் நான் செய்த தவறுதான். பெரியோர் சொல் கேளாமை. ஆம். அப்போது ஏற்பட்ட முழு சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்த்ததால் பார்வைக் குறைபாடு ஏற்பட்டது. அப்போதிலிருந்து கண்ணாடி போட ஆரம்பித்தேன்.

அப்போதுதான் என்னோடு முதல் பெஞ்சில் கூடவே உட்கார்ந்திருந்த பாஸ்கரன் என்னை தேற்றினான். வகுப்பிலும் ஆசிரியரிடம் திட்டு, அடி. வீட்டிலும் அம்மாவிடம் அடி, திட்டு. (அப்பா வருத்தப் பட்டார்.)
பாஸ்கரன் மெதுவாக எனக்கு வாழ்க்கையின் சில ரசனைகளை, அழகுகளை காண்பித்தான்.
சமஸ்கிருதம், ஜோசியம், நியூமரலாஜி போன்ற விசயங்களில் ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும்போதே தெளிவாக படித்து என்னிடம் விளக்கவும் விவாதம் செய்வதுமாக எனக்கு ஒரு புதிய உலகத்தை காண்பித்தான்.

ஆங்கிலத்தில் மும்பையிலிருந்து ஒபினியன் என்றொரு பத்திரிக்கை வந்து கொண்டிருந்தது. அதற்கு சந்தா செலுத்தி அதைப் படிக்கச் சொன்னது அவன்தான்.

அதுவரை எனக்கு ஆங்கிலத்தில் பரிச்சயமில்லாத வார்த்தைகள் அப்போது முதல் என்னோடு பேசத் துவங்கியது.

விளையாட்டில் எனக்கு ஆர்வம் ஓரளவுதான். மரக் கிளைகளில் தலை கீழாக தொங்குவதை எனக்கு சொல்லி கொடுத்தவரின் பெயர் மறந்து போய்விட்டது. தினமும் ஒருமுறை தலை கீழாக தொங்குவதை பழக்கமாகக் கொண்டிருந்தேன்.

என் தந்தையிடமிருந்து நான் கற்றுக் கொண்ட ஒரு உருப்படியான பழக்கம் நேரம் தவறாமை. பள்ளியில் எப்போதும் கேட்டை முதலில் திறப்பவன் நான்தான்.

அந்த பள்ளியில் “punctuality only for railways? No. Also for you.” என்று எழுதி வைத்திருந்த போர்டும், காலையில் ஒலிபெருக்கியில் போடப்படும் பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்தமானவை.

மயில்சாமி எனக்கு பழக்கமான போது எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது.

ஆறாம் வகுப்பு முடியும் தருவாயில் வகுப்பில் ஓடி விளையாடிய போது பெஞ்சு தொடையின் மேல் விழுந்து தொடை எலும்பு முறிந்தது.

எனவே ஆண்டு தேர்வு நடைபெற்ற சமயத்தில் மருத்துவமனையில் இருந்தேன். ஆண்டுத்தேர்வில் முழு புத்தகமும் படித்து எழுதக் கூடிய பிரச்சினையிலிருந்து தப்பித்து விட்டதாக நான் நினைத்தபோது என் நினைப்பில் மண்ணைப் போட்ட புண்ணியவான்கள் இரண்டு பேர்.

ஒன்று மயில்சாமி.

இன்னொன்று என் தாய்.

ஆம். தினமும் என்னை பார்க்க வரும் மயில்சாமியிடமிருந்து கேள்வித்தாளைப் பெற்று மருத்துவ
மனையில் படுத்துக் கொண்டே என்னைத் தேர்வு எழுத வைத்தார் என் தாய். பிறகு அதை என் தந்தையிடம் என் அக்கா பானுமதியிடம் கொடுத்து திருத்த வைத்து மருத்துவ மனையிலேயே திட்டு அர்ச்சனை பெற்றேன்.

அதன்பிறகு கோடை விடுமுறை ஆதலால் வீட்டில் படுத்தபடி இருந்த என்னோடு கதை புத்தகங்கள் பேச ஆரம்பித்தன.

அவற்றை பல முறை படித்ததையும் அவற்றின் பெயர்களையும் அடுத்த இடுகையில்.

கணவன் வாங்கலையோ..கணவன்!!!

இந்த நகைச்சுவையை மின்னஞ்சலில் அனுப்பிய என் நண்பன் சைலேந்திராவுக்கு நன்றி.

ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது….அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..

அது என்னன்னா…!

1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.

2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு…ஒவ்வொரு தளத்துளயும்
இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும்.
ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..
அப்டியே வெளிய தான் போக முடியும்.

இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா….”மச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன…ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது

முதல் தளத்துல அறிக்கை பலகைல “முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்” அப்டின்னு போட்டுருந்துச்சு

இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா

இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல “இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் ” அப்டின்னு போட்டுருந்துச்சு

இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.

மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல “இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். ” அப்டின்னு போட்டுருந்துச்சு

அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும் ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.

நாலாவது தளத்துல அறிக்கை பலகைல “இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.

வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் ” அப்டின்னு.
இதை விட வேற என்ன வேணும்…நல்ல குடும்பம் அமைக்கலாமே?

கடவுளே…மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும்.” அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.

ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல “இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.

வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் ” அப்டின்னு.
அவ்ளோ தான்…..அந்த பெண்மணியாள முடியல…[ வடிவேலு ஸ்டைலில்] …சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே..அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது…சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..

ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல

“இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை..வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது ..இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான் .

எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி …
பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் ” அப்டின்னு போட்டிருந்தது .

அந்த நாளும் வந்திடாதோ? – 1

பொதுவாக வயசாகிவிட்டது என்பதை எப்படி உணரலாம்?
1) சின்ன சின்ன விசயங்களையும் பெரிதாக கவனிப்பது
2) சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்வது
3) நடக்காததை நடந்து விடும் என எதிர்பார்ப்பதும் நடந்ததை நம்ப மறுப்பதும்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
சரி, சரி இப்போ என்ன சொல்ல வரேன்னு கேட்கறீங்களா?
சொல்கிறேன்.
என் பிள்ளைப் பிராயத்தையும் இளமைக் காலத்தையும் பற்றி சொல்லப் போகிறேன்.
(ஒன்னும் பெரிசாக இன்னும் சாதித்து விடவில்லை என்றாலும் இவன் என்னவோ சாதிக்கத்தான் போகிறான்னு (இன்னுமா இந்த உலகம் நம்மளை நம்புது?) என்னைச் சுற்றி அனைவரும் பேசுவதால் நிஜமாகவே நாம் ஏதோ சாதித்து விட்டோம் அப்படின்னு நினைக்கத் தோணனும் இல்லையா?
இல்லை.
பயம் வருகிறது. இன்னும் எத்தனை காலத்தில் அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன்?

மூன்று விசயங்களை முதலிலேயே சொல்லி விடுகிறேன். நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்.
1) எனது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் தீர்மானித்தது நானில்லை. மற்றவர்களே.
ஆனால் மாணவர்களுக்குத் தலைமைப் பண்பு கற்பிக்கும் பணியில் இருக்கிறேன். (என்னத் தகுதி இருக்கு?)
2) இதுவரை எந்த இலட்சியமும் இல்லை. (இன்னொரு ராமானுஜத்தை கண்டுபிடிக்கும் இலட்சியம் கூட ஆசையாகத்தான் உள்ளது. திடமான கடமையாக இல்லை).முரண் என்னவென்றால் மாணவர்களுக்கு இலட்சியத்தின் அவசியத்தைக் கற்பிக்கின்றேன்.
3) யார் மீதும், எதன் மீதும் பற்றே இல்லை எனச் சொல்ல முடியாது. அதற்காக சிரமபடுத்திக் கொள்வதில்லை.

இத்தகைய விசயங்களுக்கு காரணம் என் வாழ்க்கையை படிக்கும்போது கிடைக்கக் கூடும். ஆனால் என்னை பின்பற்றும்படி சொல்லிக் கொள்வது போல் எந்த விசயமும் இல்லை என்பதுதான் உண்மை.

எனக்கு இரு தமக்கை(அக்கா) மற்றும் மூன்று அண்ணன்கள். நாந்தான் கடைக்குட்டி. அப்பா தமிழ் ஆசிரியராக இருந்து 33 ரூபாய் சம்பளத்தில் ஓய்வு பெற்றவர். நான் பள்ளிக்கு போகும் காலத்தில் அவர் ஓய்வு பெற்று வீட்டு ட்யூசன்கள் எடுத்துக் கொண்டிருந்தார்.

எனது பாலர் வகுப்பு அரசினர் பால்வாடியில் துவங்கியது. ஒன்றாம் வகுப்பையும் இரண்டாம் வகுப்பையும் கோவை கவுண்டம்பாளையத்தில் இருந்த கலைவாணிக் கல்வி நிலையத்தில் தமிழ் வழியில் படித்தேன்.

உடனே என் அக்கா நான் ஒருவனாவது வீட்டில் ஆங்கில வழியில் படிக்க வேண்டும் என்று விரும்பி கவுண்டம்பாளயத்திலுள்ள கில்ட் ஆஃப் சர்வீஸ் பள்ளியில் மீண்டும் என்னை இரண்டாம் வகுப்பில் சேர்த்தார்.

இங்கிருந்துதான் வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்புமுனையையும் மற்றவர்கள் எனக்காக தீர்மானித்தார்கள் எனச் சொல்ல முடியாது.
நான் இரட்டைக் குழந்தையாகத்தான் பிறந்தேன். கூடப் பிறந்த தங்கை பிறக்கும்போதே இறந்துவிட நான் குப்புசாமி ஆஸ்பத்திரியில் ஒரு இங்குபேட்டரில் வைக்கப்பட்டு பிழைக்க வைக்கப்பட்டேன். இதற்கான முடிவை யார் எடுத்தார்கள் எனத்தெரியவில்லை. அவர் யாராக இருப்பினும் எனது நன்றி.

பாலர் வகுப்பில் படிக்கும் போதே என் அம்மாவை குழப்பி வேறொரு வழி வீட்டிற்கு கண்டுபிடித்து வந்ததும் அதனால் அடிவாங்கியதும், நினைவிருக்கிறது. பாதையில் இரும்பிற்காக பவுண்டரியில் இருந்து கொட்டப்பட்ட கல்லை உடைத்துக் கொண்டிருந்த ஒரு கூட்டத்தினரிடமிருந்து ஒரு பெரிய இரும்பைப் பெற்று அதனை வழி முழுவதும் கால்பந்தாய் உதைத்து விளையாடி வந்த நான் காலில் இரத்தக்காயம் ஏற்படுத்திக் கொண்டதால் அம்மா என்னை உதைத்து விளையாடவில்லை.

இந்த சமயத்திலிருந்தே கதை கேட்கும் ஆர்வமும், கதை சொல்லும் ஆர்வமும் எனக்கு ஏற்பட்டது. எப்படி என்பதை அடுத்த இடுகையில்.

Follow

Get every new post delivered to your Inbox.