கவிதாய்வு

வெகு காலமாயிற்று எழுதி. நேற்று ஒரு தேநீர் கடையில் பஜ்ஜி வைத்த காகிதத்துண்டு தினமலர் வார மலரில் வெளிவந்த ஒரு கவிதை(?) என்னை ஈர்த்தது. பரிசு பெற்ற அக்கவிதை இதோ

எங்கே இருக்கிறது?
* எங்கே இருக்கிறது
எதில் இருக்கிறது
மனிதன் தேடி அலைகிற
மகிழ்ச்சி…

* பேராசை
முடிகிற போது
பேரின்பம்
தொடர்கின்றன!

* போதும் என்ற
மனதில் தான்
புன்னகை மலர்கள்
மலர்கிறது!

* தட்டிப் பறிப்பதில்
இல்லை…
விட்டுக் கொடுப்பதில்
இருக்கிறது
நிம்மதி!

* “நான்,
எனது’ என்ற
சுயநலத்தை
துறந்த மனமே
பேரின்பத்தில்
திளைக்கிறது!

* எங்கே…
எதில் இருக்கிறது
மனித மனம்
தேடி அலைகிற
மகிழ்ச்சி!

* பணத்தில்
இல்லை…
பதவியில்
இல்லை
பொன்னிலும்
மண்ணிலும்
இல்லவே இல்லை!

* வேறெங்கும் இல்லை…
மனிதன் தேடும் மகிழ்ச்சி
அவனின்
மனதுக்குள் தான்
இருக்கிறது!
நெப்போலியன், சென்னை.

நல்ல கருத்துக்கள். ஆனால் சில வார்த்தைகளை இடம் மாற்றினால் இன்னும் சிறப்பாக கவிதை

இருந்திருக்கும் எனத் தோன்றியது.

எனவே நான் மாற்றிய கவிதை இதோ

எங்கே இருக்கிறது?
* எங்கே இருக்கிறது
எதில் இருக்கிறது
மனிதன் தேடி அலைகிற
நிம்மதி

* பேராசை
முடிகிற போது

புன்னகை மலர்கள்
மலர்கிறது!

* போதும் என்ற
மனதில் தான்
பேரின்பம்
தொடர்கின்றது!

* தட்டிப் பறிப்பதில்
இல்லை…
விட்டுக் கொடுப்பதில்
இருக்கிறது
மகிழ்ச்சி!

* “நான்,
எனது’ என்ற
சுயநலத்தை
துறந்த மனமே
மனித மனம்
தேடி அலைகிற
நிம்மதி!
* எங்கே…
எதில் இருக்கிறது

* பணத்தில்
இல்லை…
பதவியில்
இல்லை
பொன்னிலும்
மண்ணிலும்
இல்லவே இல்லை!

* வேறெங்கும் இல்லை…
மனிதன் தேடும் நிம்மதி
அவனின்
மனதுக்குள் தான்
இருக்கிறது!

Advertisements

விஸ்வரூபம் – விமர்சனம்

எச்சரிக்கை – 1 மனம் இளகாத, கடின மனம் உடையவர்கள் இதனைப் படிக்க வேண்டாம்.

முதலில் பார்க்கும் போது எடுத்தவுடன் மனதிற்குள் புறா பறக்கிறது. இந்துஸ்தானி இசையில் மெய்மறக்கிறோம். சிறிது நேரம் கழித்து விஸ்வரூப காட்சி வந்ததும் என்னையும் மறந்து கை தட்டினேன். அதன் பிறகு கர்நாடக இசைக்கும் இந்துஸ்தானி இசைக்கும் பொதுவான தொடர்பாய் விளங்கும் துருபத் இசை முடிந்ததும் வருகிறார் ராம். மிருதங்கத்தைப் பற்றியும் தஞ்சாவூர் பாணி, புதுக்கோட்டை பாணி இரண்டிற்கும் உள்ள வேறுபாடு, இராஜ வாத்தியம் எனக் கருதப்படும் தவில் போன்ற மிருதங்கத்தைப் பற்றி விரிவாக சொல்ல ஆரம்பித்ததும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன்.

ஒரு நிமிடம்.
தலைப்பை பார்த்துவிட்டு இதை யாரும் கமலுடைய விஸ்வரூபத்தின் விமர்சனம் என்று யாரும் தப்பாக நினைத்து விடாதீர்கள். என் மேல் தவறில்லை. விஸ்வரூபத்தை நேற்று பார்த்து விட்டு இன்று கோவையில் நடந்த ’இசையில் ”புது”க்கோட்டை’ என்கிற கலந்துரையாடல் நிகழ்ச்சியை அருவி அமைப்பு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் நமது சொல்வனத்தின் எழுத்தாளர் லலிதாராம் நிகழ்த்திய உரையைப் பற்றியே இந்தப் பதிவு.

முதலில் கவுல் அவர்கள் துருபத் இசையைப் பற்றி எடுத்த ஆவணப் படம் திரையிடப் பட்டது. பிறகு லலிதா ராம் அவர்கள் ’இசையில் ”புது”க்கோட்டை’ என்கிற தலைப்பில் அருமையாக பேசினார்.

எச்சரிக்கை – 2. எனக்கு இசையைப் பற்றி ஆனா, ஆவன்னா வரை மட்டுமே தெரியும். ஓரளவு நல்ல இசை எந்த வடிவில் இருந்தாலும் இரசிக்கக் கூடியவன். எனவே ‘சுப்புடுக்கள்’ இனி தொடர்ந்து படிக்காமல் வேறு வேலை பார்க்கவும்.

லலிதா ராம் பற்றி எனக்கு ஏற்கனவே வியந்தவன் நான். பொதுவாக மூன்று விசயங்களில் ஆர்வம் கொண்டிருப்பவர்களைப் பற்றி மற்றவர்கள் அஞ்சுவார்கள்.
அவை என்ன?
1) கணிதம்
2) இசை
3) செஸ் விளையாட்டு.

இந்த மூன்றில் எதைப் பற்றி நாம் நுணுக்கமாக பேச ஆரம்பித்தால் அருகிலுள்ள இந்த விசயங்களில் விசய ஞானம் குறைவுள்ளவர்கள் தலை தெறிக்க ஓடி விடுவார்கள்.
ஆனால் லலிதாராம் இட்லி வடை ரசிகர்களுக்கு ஆனந்தின் செஸ் விளையாட்டைப் பற்றி எழுதியபோதும் சரி, தமிழோவியத்திலும் சொல்வனத்திலும் இசையைப் பற்றி எழுதியபோதும் சரி என்னைப் போல் இசையில் ஞான சூன்யமாக இருக்கும் எவனுக்கும் செஸ் விளையாட்டிலும் இசையின் மீதும் ஒரு காதல் ஏன் வெறியே வரும். அத்தகையவர் இன்று இசையிலுள்ள கணக்கின் வித்தைகளைப் பற்றியும் அழகாக விவரித்தார். அவ்வளவு அருமையாக யோசித்து எழுதுபவரின் சொல்வண்ணம் அங்கே கண்டேன். இசையைப் பற்றி சொல்லிய செயல்வண்ணம் இங்கே கேட்டேன்.

சரி.
மெயின் பிக்சருக்கு வரலாம்.

மிருதங்கம் என்றால் மிருத் + அங்கம். மிருத் என்றால் மண். மண்ணால் ஆகிய
கருவி என்று பொருள்படும். ஆனால் நமக்குத் தெரிந்தவரை மிருதங்கத்தை மண்ணால் செய்வதில்லை. மிருதங்கத்திற்கும், முழவு, மத்தளம், முரசு, பறை, குடமுழா போன்ற கருவிகளுக்கும் உள்ள தொடர்பை முதலில் விவரித்தார். இராஜவாத்தியம் என்று அழைக்கப் படும் தவிலுக்கும், மிருதங்கத்திற்கும் உள்ள பொருத்தத்தை எடுத்துக் கூறினார்.

முதலில் இசைத்தமிழ் ஒன்றாகவே இருந்தது. பிறகு தஞ்சாவூர் பாணி, புதுக்கோட்டை பாணி எனப் பிரிந்தது. தஞ்சாவூர் பாணியில் கணிதத்தின் சூத்திரங்களுக்கு உட்பட்ட எண் அழகு உணர்ச்சி அதிகம் இருந்தது. புதுக்கோட்டை பாணியில் கணிதத்தின் வடிவ இயலின் கற்பனையறிவு அதிகம் தென்பட்டது.

புதுக்கோட்டை பாணியில் இசையில் புதுமைகளை விளைவித்து விஸ்வரூபம் எடுத்த மூவரைப் பற்றி அழகாக எடுத்துச் சொன்னார். முதலில் மான்பூண்டி பிள்ளையைப் பற்றிக் கூறினார். அடுத்த பதிவில் விரிவாக எழுதுகின்றேன்.

இன்று மாலை என் பள்ளி நண்பர்களைப் பார்க்க போக வேண்டும். மே மாதம் 1ந்தேதி இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் 1977ல் இருந்து 1982 வரை என்னுடன் படித்தவர்கள் கோவையில் சந்திக்கவிருக்கிறோம். அதற்காக திட்டமிட இன்று மாலை போக வேண்டும். அடுத்த பதிவில் தொடர்ந்து எழுதுகின்றேன்.

இன்னும் ஒரு நாளோ?

இன்னும் ஒரு நாளோ?
அதற்குள் ஒரு புத்தாண்டு வந்ததோ?
2012க்கு ஒரு வயதுதான் ஆகிறது.
பொய்த்து போன பருவ மழையோடு
பொய்த்து போன சில கனவுகளும்.

வாய்த்த தருணங்களில் எல்லாம்
காய்த்த கனவுகள் கனியாகாது
மாய்த்து போன ஆண்டே நீ போ.

இருட்டு ஒளித்து வைத்த மர்ம பொக்கிஷங்கள்
திருவனந்தபுரத்து கோயிலின் இரகசியங்களாய்
இரசித்துப் பார்க்கவே மின்சாரம்
மசித்துப் போன ஆண்டு.
அடித்து ஆடி சதமெடுத்த தோனிக்கும் தோனியிருக்கும்.
பிடித்த சனியாய் இருந்த 2012 தொலைந்து விட்டதால்
இந்த ஆண்டாவது வாய்க்கட்டும் பல வெற்றி
என வாழ்த்துகிறேன் அனைவருக்கும் எனைச் சுற்றி.

தூக்கத்தில் கழிந்த ஆண்டு

The WordPress.com stats helper monkeys prepared a 2012 annual report for this blog.

Here’s an excerpt:

The new Boeing 787 Dreamliner can carry about 250 passengers. This blog was viewed about 1,100 times in 2012. If it were a Dreamliner, it would take about 4 trips to carry that many people.

Click here to see the complete report.

எதிர்பாராத கவிதைக்கு எதிர்பார்த்த பொழிப்புரை

நண்பர் பாஸ்கரின் கவிதை “எதிர்பாராதது”
http://livelyplanet.wordpress.com/2012/10/03/silence/
அதனைப் பற்றிய ஒரு பித்துக்குளியின் பொழிப்புரை எதிர்பாராதது.
இதோ அந்த கோனார் நோட்ஸ்.

முதல் வரியில் இன்றைய காலகட்டத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒலிமாசை கட்டுபடுத்த முடியாமல் இருப்பதை உணர்த்துவதாக பொருள் கொள்ளலாம்.
இரண்டாம் வரியில் சன்னல் என்கிற வார்த்தை பிரயோகம் எவ்வாறு சமூகத்தில் குடும்பம் சிறைபட்டு இருக்கிறது என்பதை குறிக்கலாம். (முதல் வரியினை வீட்டுக்கு வெளியேயும் அடுத்த வரியில் வீட்டுக்கு உள்ளேயும் என பிரித்து பார்க்கும் மனதில் அடுத்த வரியின் தொடர்ச்சி குடும்பத்தின் பாச கயிற்றால் கட்டுபட்டு கிடக்கும் கவிஞர், டிவியின் பாசக்கயிற்றால் கட்டுபட்டு கிடக்கும் மனைவியும் மகனும் எனப் பொருள் கொள்ளலாம்.
அடுத்த பத்தியில் முதல் வரி தன் நிலை ஆராய்ச்சி. உள்ளே இழுத்துக் கொள்வதும் கொள்ளாததும் அவரவர் விருப்பமே என்று நினைத்தால் அடுத்த வரி அவ்வாறில்லை. அதுவே மனதிற்கு அளிக்கும் உணவு என இயம்புகிறது. முடிவாக உண்ட திருப்தி இல்லாமல் ஓலமும் இடுகிறது மனம்.
செவித்து என்கிற சொற்பிரயோகம் அருமை. அத்தனையும் என்பதில் உள்ள சொற்சிக்கனமும் களைத்து ஓய்ந்த பொழுதில் என்கிற சொற்றாடலில் தென்படும் மனதின் ஆயாசமும் நன்கு வெளிப்படுகிறது.
இலை என்கிற உருவகம் நம் வாழ்க்கையை குறிக்க கூடும்.
முதல் வரி ஓசையில் ஆரம்பித்து இறுதியில் நிசப்தம் என முடித்தது அற்புதம்.
இங்கு ஓர் உண்மை அழகாக வெளிப்படுகிறது. ஒரு மர்மக் கதை போல் செல்லும் இவ்வரிகளில் இறுதி க்ளைமாக்ஸாக அனைத்து ஓசைகளும் காற்றில் ஏற்படும் அசைவுகளே என்பதை உணர்த்தும்போது மர்மமுடிச்சு அவிழ்கிறது.

ஆசிரியர் தினம்

இன்று ஆசிரியர் தினம்.
நானும் ஓர் ஆசிரியர் என்று சொல்லிக் கொள்கிறேன்.
ஆசிரியப் பணியை நான் திறம்படச் செய்கிறேனா?
இல்லை.

நானும் ஓர் ஆசிரியர் என்று சொல்லிக் கொள்கிறேன்.
மாணவர்களுக்கு என்ன சொல்லிக் கொடுத்திருக்கிறேன்?
வழக்கமான அனைத்து பாடங்களையும் புரியக் கூடிய விதத்தில்
சொல்லிக் கொடுத்திருக்கிறேனா?
இல்லை. (ஓரிரு பாடங்களைத் தவிர)

வழக்கமில்லாத பாடத்திற்கு அப்பாற்பட்ட அனைத்து சந்தேகங்களுக்கும்
விளக்கியிருக்கிறேனா?
இல்லை.(ஓரிரு சமயங்களைத் தவிர)

அன்போடு அரவணைத்துப் பாடம் நடத்துகிறேனா?
இல்லை. (சில காலத்திற்கு முன்பு அப்படித்தான் இருந்தேன். இப்போது மாறிவிட்டேன்)

பாடங்களை சிரத்தையாக நடத்துகிறேனா?
இல்லை. (மற்ற பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஓடி விடுகிறேன்)

மாணவர்கள் நான் நடத்துவதை விரும்புகிறார்களா?
சிலர் விரும்பவில்லை என உணர்கின்றேன்.
அவர்களுடைய நிலைக்கு இறங்கி கற்பிக்க இப்போது நேரம் போதவில்லை.

மாற வேண்டும்.
நான் மாற வேண்டும்.
மாணவர்கள் ஏமாறக் கூடாது.

என்று நான் முழுவதும் மாறுகின்றேனோ
என்று மேலே கேட்கப்பட்ட வினாக்களுக்கு
இல்லை என சொல்லாது
ஆம் என்று சொல்கிறேனோ

அன்றுதான் எனக்கு
ஆசிரியர் தினம்.

பி.கு. பல இடங்களில் என் பழைய மாணவர்களை சந்திக்க நேரிடுகிறது.
அவர்கள் என்னைப் புகழும்போது கூச்சம் ஏற்படுகிறது.
அவர்களுக்கு என்ன செய்து விட்டேன்?
அவர்களுக்கு புரியும் விதத்தில் பாடம் நடத்தியதற்கு
நன்றி தெரிவிக்கிறார்கள்.
ஐயா, அது எனது கடமையல்லவா?
இதில் எனக்கு என்ன பெருமை?

இப்போது அந்த கடமையைக் கூட சரிவரச் செய்வதில்லை.

எப்படி இருந்த நான்
இப்படி மாறி விட்டேன்?

முக்கியமான பின்குறிப்பு
அனைத்து நல்லாசிரியர்களுக்கும் எனது
உளங்கனிந்த வாழ்த்துக்கள்.
என் அருமை நண்பர் ஹாஜா செரிப் (தலைமை ஆசிரியர்,சி.எம்.எஸ் மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி,கோவை)
அவர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைத்தமைக்கு பாராட்டுக்கள்.
எப்போதோ கிடைத்திருக்கவேண்டும். அதைப் பற்றி தனியாக ஒரு பதிவே போட வேண்டும்.
அவரிடமிருந்து கற்றுக் கொண்டது பல.
அந்த நல்லாசிரியர்களைப் போல
மாற வேண்டும்.

தாமதத்திற்கு மன்னிக்கவும்

ப்னீக்ஸ் பறவையின் பெயரை தன் நிறுவனத்திற்கு என் மகன் வைத்துள்ளான்.

நானோ ப்னீக்ஸ் பறவையாகவே ஆகிவிட்டேன்.

மீண்டும் எழுத ஆரம்பிக்க தூண்டியது எனக்கு இன்று வந்த ஒரு மின்னஞ்சல்.

அருப்புக்கோட்டையில் நடந்த எனது நிகழ்ச்சி பற்றி பேராசிரியர் முனைவர்.வேலவன் அவர்கள் அனுப்பிய ஒரு அவசர மின்னஞ்சலில் கீழே குறிப்பிட்டுள்ள வாக்கியம் எனக்குள் ஒரு பொறியை விதைத்தது.

”நன்றி ஐய்யா.உங்க நகழ்ச்சி போட்டோ அனுப்பிருவாங்க. தாமதத்திற்கு மன்னிக்கவும்”

எப்படிபட்ட ஒரு வாக்கியம்.

நன்றி எனத் தொடங்கியவுடனே கூறிவிட்ட பிறகு அந்த வாக்கியத்தில் மீதி வார்த்தைகள் எதற்கு?

ஐய்யா என்பதில் தென்படும் அன்பின் அழுத்தம்.

நிகழ்ச்சியினால் எனக்கு ஏற்பட்ட ஒரு நெகிழ்ச்சி

ஒரு நிமிடம்.

இங்கு நகழ்ச்சி எனக் குறிப்பிடப் பட்டது வார்த்தை பிறழ்வு அன்று.

புதிய சொல்லாக்கமே என எனக்குப் படுகிறது.

ஆம். அன்று அங்கு நடந்தது நிகழ்ச்சி என்பதை விட ஆடை நகழ, நகழ ஏற்படும் ஒரு உணர்வு போன்று எனக்கு ஏற்பட்டது வார்த்தையில் வடிப்பது கடினம் என நினைத்திருந்தேன். இன்று கிடைத்துவிட்டது. ‘நகழ்ச்சி’.

முதலில் சிறிது அறிமுக உரையுடன் ஒரு ஆவணப்பட திரையிடலுடன் கலந்துரையாடல் என திட்டமிட்டிருந்தோம். ஆனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் பலவகைப்பட்ட பார்வையாளர்கள் கூடி எங்களை திகைக்க வைத்தனர். விளைவு?

மூன்று குறும்படங்களும் சேர்த்து திரையிடப்பட்டது. விளக்கக் குறிப்புகள் நடுவே கொடுக்கப் பட்டன.

அதாவது ஒவ்வொரு நிமிடமும் பார்வையாளர்களும், நானும் நகர்ந்து கொண்டே இருப்பது போன்று நிகழ்ச்சி அமைந்தது.

போட்டோ அனுப்பிருவாங்க.

பவர்பாயிண்டில் ஒவ்வொரு சிலைடு காண்பித்ததும் சிறிது விளக்கத்தோடு ஒவ்வொரு குறும்படமும் அவ்வப்போது சிறு சிறு இடைவெளியில் ஆவணப்படமும் திரையிடப்பட்டது அனைவருக்குமே ஒரு அதிர்ச்சியான அனுபவமே.

நீண்ட சொற்பொழிவு இல்லை. தொடர்ந்து ஆவணப்படம் முழுமையாக திரையிடப்படவில்லை.

பழைய நாடக உத்தியில் கட்டியக்காரனின் பாத்திரப் படைப்பாக நான் விளங்கினேன்.

’தாமதத்திற்கு மன்னிக்கவும்’

தாமதமும் ஒரு மதமே. மனிதனைப் பிடிக்கும் இம்மதமும் இனி வேண்டாம்.

மன்னிக்கவும்.

நிகழ்ச்சி எதைப் பற்றி எனக் கூறவே இல்லையே?

நான் எடுத்துரைக்க வந்ததோ  ‘நவீன நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்கிற தலைப்பில்.

நான் எடுத்துரைத்ததோ, ‘நவீன நாடகம் தோற்றதும் அதன் தளர்ச்சியும்’.

அடுத்த பதிவில் அதனைப் பற்றி சிறிது பார்ப்போம்.