எனக்கு பிடித்திருக்கிறது


எனக்கு இந்தப் புகைப்படம் பிடித்திருக்கிறது– இந்த வாக்கியத்தை சற்று ஆராய்வோம்.

எனக்கு பிடித்திருக்கிறது – என்பது விருப்பத்தைக் குறிக்கிறது.

ஆசையே பாவங்களுக்குத் தூண்டுகோலாகிறது என்கிறது பெளத்தம்.

காமோகார்ஷீத் – ஆசை என்னை பாவம் செய்யத் தூண்டுகிறது.

மேலும் ஆராய்வோம்.

எனக்கு என்ன பிடித்திருக்கிறது?

இந்தப் புகைப்படம்.

புகைப்படம் என்பது நிஜத்தின் சாயை.

விஷ்ணுவிற்கு சாயை பிடிப்பான் என்கிற நாமம் இருப்பதாக யாரோ சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் பற்றி விவரம் அறிந்தவர்கள் எழுதலாம்.

நிஜம் என்பது உண்மை.

எது உண்மை?

எது சாயை?

மீண்டும் ஆய்ந்தால், எது பிடித்திருக்கிறது?

இந்தப் புகைப்படம்.

இந்தப் புகைப்படத்தில் என்னப் பிடித்திருக்கிறது?

அதனை எடுத்த விதமா?

அந்த புகைப்படத்தில் உள்ள பொருட்களா?

அந்த புத்த பிட்சுவா?

புகைப்படத்தின் அடியில் இருக்கும் செய்தி உணர்த்துவது என்ன?

ஏன் அந்த செய்தி சிறியதாக அச்சிடப்பட்டு உள்ளது?

செய்தி முக்கியமா?

படம் முக்கியமா?

செய்திக்கு படம் ஆதாரமா?

படத்திற்கு செய்தி ஆதாரமா?

ஆதாரத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

இந்தப் புகைப்படத்தில் உள்ள செய்தி என்ன?

மறைந்திருக்கும் செய்திகள் என்ன?

முன்னேற்றம் தராது என்று நிச்சயமாக, உறுதியாக, தெளிவாக தெரிந்த ஒன்றை மீண்டும் மீண்டும் முயற்சிப்பது முட்டாள்தனமில்லையா?

எனக்கு என்பதில் உள்ள பொருள் பற்றி பிறகு பார்ப்போம். (அட ராமா ! இதைக் கூட முழுமையாக எழுத முடியாமல் தொடரும் போட வேண்டியுள்ளது.)

பற்றி veeraa1729
கணித பித்து பிடித்த ஒரு தமிழ் ஆர்வலர். சொல்லி கொடுப்பதிலும் கற்பிப்பதிலும் உள்ள உற்சாகம் எனக்கு திருத்துவதில் இல்லை. ஏனெனில் என் பிழைகள் அதிகம். அதை திருத்துவார் யார்?

2 Responses to எனக்கு பிடித்திருக்கிறது

  1. natbas says:

    ஏம்பா, எதையுமே முழுசா செய்யக்கூடாதுன்னு கொள்கை ஏதாவது வெச்சிருக்கீங்களா? அட் லீஸ்ட் அந்தப் போட்டோவையாவது காப்பி பண்ணி இங்க ஒட்டறது!!! 🙂

    • veeraa1729 says:

      அதுதான் தொடரும் போட்டிருக்கேனே. அடுத்த பதிவில் போட்டோ போடப்படும். அதுவரை போட்டோவை தேடுபவர்கள் உங்கள் பதிவில் பார்த்து கொள்ளட்டுமே. என்ன நான் சொல்றது சரிதானே?
      இப்படிக்கு
      சுறுசுறுப்பு திலகம்.